நீரில் மூழ்கி 2 பெண் குழந்தைகள் பலி

595பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்களுடன் சென்ற சிறுமிகள் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்த நீரில் மூழ்கினர். இதில், இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சிறுமிகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி