நெல்லை: குணமடைந்தவர் தந்தையிடம் ஒப்படைப்பு
நெல்லையில் சுமார் 25 வயதுடைய அந்தோணி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை நெல்லை அரசு மருத்துவமனை மனநோயாளி மீட்பு ஊழியர்கள் மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர். தற்பொழுது அவர் முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் முன்னிலையில் அந்தோணி அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.