அம்பாசமுத்திரம்
நகராட்சி ஆணையர்களுக்கு திடீர் கிடுக்குப்பிடி
நகராட்சி ஆணையர்கள் தங்கள் குடியிருப்புகளில் நகராட்சி ஊழியர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்துவதாக தெரிய வருகிறது. எனவே, நகராட்சி ஆணையர்கள் பணியாளர்களை வீட்டுப் பணிக்கு பணியமர்த்தக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று நகராட்சி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நெல்லைக்கும் இது அனுப்பியுள்ளனர்.