இந்திய அரசியல் வரலாற்றிலேயே 66 ஆண்டுகளாக தனது சின்னத்தை இழக்காத ஒரே மாநிலக் கட்சி என்கிற பெருமையை திமுக பெறுகிறது. 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திமுக, மார்ச் 2, 1958-ல் மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றது. அப்போது அந்த கட்சிக்கு உதயசூரியன் சின்னம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. அன்று தொடங்கி 2024 வரை சுமார் 66 ஆண்டுகள் இந்தியாவிலேயே சின்னத்தை இழக்காத மாநில கட்சியாக திமுக இருந்து வருகிறது.