
நெல்லை: குளம் தூர்வாரும் பணி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வி. எம். சத்திரம் பகுதியில் குளம் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் சுகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா ஆகியோர் கலந்து கொண்டனர்.