தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்ற நிலையில் மாநாடு நடைபெற்ற திடல் தற்போது குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்கு வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை 50-க்கும் மேற்பட்டோர் விற்பனைக்காக சேகரித்து செல்கின்றனர். அங்கு குப்பைகள் குவிந்துள்ள நிலையில் அதை முறையாக யாரும் இன்னும் அகற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.