சாட்-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. அதில் முதலில் வருவது என்னவெனில் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைக் கேட்கக் கூடாது என்பதுதான். அதே போல, சாட்-ஜிபிடியிடம் சட்ட விரோத செயல்களுக்கான வழிகள் பற்றியும், நிதி ஆலோசனைகள், மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றையும் கேட்கக் கூடாது என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.