நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சார்பில் பொருட்காட்சி நடந்து வருகிறது. பாரம்பரியமாக டவுன் எஸ். என் ஹை ரோட்டில் பொருட்காட்சி திடலில் தான் வழக்கமாக நடக்கும். முதல் முறையாக பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.
இடம் மாற்றப்பட்டதால் பொருட்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் கூட மக்களின் வசதிக்காக மாநகர பேருந்துகள் எதுவுமே அங்கு நிற்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.