அரசியலை கண்டு பயமில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் சூளுரைத்துள்ளார். தவெக மாநில மாநாட்டில் உரையாற்றி வரும் விஜய், "முதன்முதலில் அம்மா என்று அழைக்கும் குழந்தை முன்பு பாம்பு வந்து நின்றால் எப்படி இருக்குமோ அதுதான் அரசியல். அம்மா என்ற அழைக்கும் குழந்தை எப்படி அச்சமின்றி பாம்பை பிடித்து விளையாடுமோ, அதுபோல் தான் அரசியலில் செயல்பட முடியும். பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம்" என்று கூறியுள்ளார்.