ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக அவரது செல்போன் கீழே விழுந்தது. அதனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே அவர் தலைகீழாக சிக்கிக்கொண்டார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் சுமார் ஒரு மணி நேரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு வந்த மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி அப்பெணை சிறு காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்தில் அவர் சுமார் 7 மணி நேரம் தலைகீழாக இருந்துள்ளார்.