எப்போதும் தோல் அலர்ஜி பிரச்சனைகள் இருப்பவர்கள், ஒரு கைப்பிடி குப்பைமேனி, ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடி துளசியை எடுத்து நன்கு கழுவி, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை உடல் முழுவதும் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து, குளித்து வரவும். வாரத்திற்கு 2-3 முறை இவ்வாறு செய்து வர நாட்பட்ட தோல் நோய்கள் தீரும். முகம் பொலிவு பெறும். முகப்பருக்கள், தழும்புகள், கருவளையம் ஆகியவையும் நீங்கும்.