துவரம் பருப்பில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது, உடலுக்கு தேவையான கால்சியமும் இதில் உள்ளது. கர்ப்பத்தில் உள்ள கருவின் வளர்ச்சிக்கு உதவும் துவரம் பருப்பு மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், உணவில் துவரம் பருப்பை சேர்ப்பது நன்மை அளிக்கும். இது உடல் சுறுசுறுப்பு, ஆற்றலை அதிகரிக்கும்.