நெல்லை பாபநாசத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் அவர் கட்சியின் புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என்று விஜயின் தந்தை கூறியிருக்கிறார். அவரை எப்படி கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினார் என தெரியவில்லை. வருமானவரித்துறையில் சிக்கிய போது நடிகர் விஜய்க்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது. ஒருவர் மற்றவரை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்றார்.