முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளிக்கப்பட்டது. 2023-24ம் ஆண்டில் விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.