
டவுண்; வலி மாத்திரை மூலம் போதை ஏற்றிய இளைஞர்கள் கைது
நெல்லையில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரகளை போதைக்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர். மாத்திரை கரைசலை ஊசி மூலம் உடலில் ஏற்ற முயன்ற வாலிபர் உட்பட இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. டவுன் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்ற பாஞ்சாலராஜன் அனுமந்து என்ற இருவர் நேற்று (அக்.,8) போதை விவகாரத்தில் டவுண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.