நெல்லை நகரம் - Nellai City

திருநெல்வேலியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

திருநெல்வேலியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகின்ற 28. 08. 2024, 29. 08. 2024, 03. 09. 2024, 04. 09. 2024, 05. 09. 2024, 11. 09. 2024 மற்றும் 12. 09. 2024 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமானது 28. 08. 2024 அன்று வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 29. 08. 2024 அன்று இராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 03. 09. 2024 அன்று சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 04. 09. 2024 அன்று அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 05. 09. 2024 அன்று மானூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 10. 09. 2024 அன்று களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 11. 09. 2024 அன்று நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 12. 09. 2024 அன்று வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


పెద్దపల్లి జిల్లా