திருநெல்வேலி கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசிநகர் பகுதிகளில் இன்று (ஜனவரி 28) குப்பைகளை அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட தூய்மை பணியில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்பொழுது கடைகளுக்கு, வீடுகளுக்கு நேரடியாக சென்று அங்கே குப்பைகளை திரட்டினர். மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போன்று ஊராட்சி தூய்மை பணியாளர்களும் தீவிர தூய்மை பணியில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.