'சிட்டி கில்லர் என்றழைக்கப்படும் சிறுகோள் பூமியை நெருங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள் தாக்கினால் மும்பை, கொல்கத்தா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக மக்கள்தொகை கொண்ட கொலம்பியாவின் பொகோடா, நைஜீரியாவின் லாகோஸ் நகரங்களும் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளானது, பூமியை தாக்கினால், அது தாக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 31 மைல் தொலைவிற்கு பயங்கர சேதம் ஏற்படும் என கூறப்படுகிறது.