திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 3) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உடலையாறு குளம் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் தோண்டப்பட்ட குழிகள் 8 மாதங்கள் ஆகியும் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.