வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று (பிப்.,21) வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சுப்மின் கில் சதம் விளாசினார். இது ஐசிசி ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்காக அடிக்கப்பட்ட 50ஆவது சதமாகும். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில், 50 சதங்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதில், அதிகபட்சமாக ரோகித் 8 சதங்களும், கங்குலி மற்றும் சச்சின் ஆகியோர் தலா 7 சதங்களும் அடித்துள்ளனர்.