திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டலத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி மார்க்கெட் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் நடைபெற உள்ள ஊழலை தடுக்கும் வண்ணம் பொது ஏலத்தில் விடக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நெல்லை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் கட்சியினர் நேற்று (பிப்ரவரி 12) மனு அளித்துள்ளனர். பின்னர் பேட்டியளித்த பலவேசம் பொது ஏலத்தில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.