நெல்லை வர்த்தக மையத்தில் பொருநை திருவிழா-2025 இன்று (ஜனவரி 31) துவங்கியது. இந்த துவக்க விழாவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளில் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமாக புத்தகத்தை வாங்கினர்.