மத்திய அரசு கொண்டுவந்துள்ள பி.எம். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு 12 மாதங்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். ஒரே ஒரு மாதம் மட்டும் ரூ.6,000 கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தில் 2ஆவது கட்டமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப்பதிவு (https://pminternship.mca.gov.in/login/) இன்று முதல் தொடங்கியுள்ளது.