திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட சிந்துபூந்துறை பகுதியில் குழந்தைகள் நலமையம் அமைந்துள்ளது. இந்த நலமையத்தின் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.