சேலம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்டுள்ள காட்சி தற்போது வெளியாகி உள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு வந்த அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடம் இருந்து சால்வையை கே.பி.ராமலிங்கம் பறித்தபோது அவர் கீழே விழ நிலைக்கு சென்றார். மேலும், மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.