கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்பாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் காமாட்சி அம்மனுக்கு சென்னையை சேர்ந்த நீரஜா விஜயகுமார் குடும்பத்தினர் 10 கிலோ எடை கொண்ட தங்க வீணையை காணிக்கையாக சமர்ப்பித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.