கோவை: சுற்றுலா பயணியை காட்டு யானை ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் (60) என்ற சுற்றுலா பயணி பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை அருகே உள்ள டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது காட்டுயானை ஒன்று மைக்கேலை மூர்க்கமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த மைக்கேல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.