இன்று (பிப். 05) காலை 7 மணியளவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை நடைபெற இருக்கும் இத்தேர்தலுக்காக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்க தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் தனது வாக்கினை பதிவு செய்தார்.