சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இன்று (பிப். 04) சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "அது வன்மையாக கண்டிக்கத்தக்கது, அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்” என்றார். தொடர்ந்து, இது பெரியார் மண் அல்ல, பெரியாரே மண் தான் என சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, “அவருக்கு நான் பதில் சொல்வதே கிடையாது" என கடந்து சென்றார்.