ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று (பிப். 05) இடைத்தேர்தல் நடைபெறுவதால் அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.