மிகவும் நஞ்சுள்ள கண்ணாடி விரியன் பாம்பு விசித்திர சத்தமிடும் இந்த வீடியோவை கண்டாலே இரத்தம் உறைந்து போகிறது. கண்ணாடி விரியன் பாம்பு அருகே நாம் சென்றாலோ அல்லது இந்த பாம்பு மற்ற விலங்கால் அச்சுறுத்தப்பட்டாலோ வட்ட வடிவில் சுருண்டு கொள்ளும். அதன்பின், உடலை பெரிதாக்கி, மூச்சுக்காற்றை உள்வாங்கியும் வெலியேற்றியும் குக்கர் விசில் சத்தம் போன்ற விசித்திர சத்தத்தை வெளியிடும். இந்த சத்தத்தை கேட்டால் கவனமாக இருக்க வேண்டும்.