ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் கிராமத்தில் உள்ள கண்டபெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு துறையுண்டார் கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்த சந்திரா (70) கூட்டநெரிசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற மர்மநபர் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.
கும்பாபிஷேகம் முடிந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த செயின் காணாமல் போனதைக் கண்ட சந்திரா அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து சந்திரா ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.