சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் மேற்கு வங்க மாநில சிறுமி ஆட்டோவில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, சாலையில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் பின் தொடர்ந்து வந்ததால், கடத்தல் கும்பல் நெற்குன்றத்தில் சிறுமியை இறக்கிவிட்டு தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.