ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று (பிப். 05) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிக்க வசதியாக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் 1,194 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ வீரர்கள் 300 பேர், சட்டம் ஒழுங்கு போலீசார் 1,678 பேர் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.