கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் தாய்மொழியில் எழுத முடியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மாநிலத்தின் கலாச்சாரத்துறை அமைச்சரான சிவராஜ், கொப்பல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதன்போது அங்கிருந்த கரும்பலகையில் கன்னடத்தில் எழுதினார். அப்போது வார்த்தைகளை எழுதமுடியாமல் தடுமாறியதால் அருகில் இருந்தவர்கள் சொல்ல சொல்ல எழுதிய காட்சிகள் வெளியாகியுள்ளது.