பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்வை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு குழுவை அமைத்துள்ளது. மாநில அரசின் நிதிநிலை, பணியாளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு 9 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.