கேரளா: திருச்சூரில் நடந்த திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எலவள்ளி பிரம்மகுளம் ஸ்ரீ பைங்கனிகல் கோயில் திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட சிரக்கல் விநாயகர் என்ற யானை திடீரென மிரண்டு ஓடி ஆனந்த் (45) என்பவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் உயிரிழந்தார். மேலும், யானை தாக்கியதில் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.