ஆத்தூர் |

ஆத்தூர்: பேனர் வைக்க இனி பணம் செலுத்தனும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் தலைமையில் நேற்று விளம்பர பேனர் தொடர்பாக வணிகர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.  இதில் பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், வணிகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் நகராட்சிக்குட்பட்ட எல்லை பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் உள்ளன என்றும், பல்வேறு பகுதிகளில் இதுபோன்று பேனர்கள் வைப்பது இருந்தாலும் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.  இதனை முறைப்படுத்த பேனர் ஒன்றுக்கு நகராட்சிக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். உரிய அனுமதி பெறாமல் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது. அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் என தெரிவித்தார். உடனடியாக வைக்கப்படும் பேனர்களுக்கு எப்படி அனுமதி பெற முடியும் என கேள்வி எழுப்பினர்.  நகர காவல் ஆய்வாளர் அழகுராணி இங்கு பேசும் போது பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள். சட்டம் போட்டவர்களை கேள்வி கேட்க வேண்டும், அமல்படுத்துபவர்களை அல்ல. உங்களை யாரும் பிளக்ஸ் வைக்க வேண்டாம் என கூறவில்லை, நிபந்தனைக்கு கட்டுப்பட்டு வைக்கவும் என கூறுகிறோம் எனதெரிவித்தார்.

வீடியோஸ்


தமிழ் நாடு