RCB அணிக்கெதிரான போட்டியில் GT அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 170 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த GT அணி பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் RCB பௌலர்கள் திணறினர். GT அணி 17.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக பட்லர் 73*, சாய் சுதர்சன் 49 மற்றும் ரூதர்ஃபோர்டு 30* ரன்கள் குவித்தனர். 3 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.