மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு இன்று (செப்.22) நீர்வரத்து வினாடிக்கு 747 கன அடியிலிருந்து 1, 478 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 103. 64 அடி. நீர் இருப்பு 69. 64 டி. எம். சி. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.