மறைந்த CID சகுந்தலா பெயரில் பரப்பப்படும் போலி புகைப்படம்.!

59பார்த்தது
மறைந்த CID சகுந்தலா பெயரில் பரப்பப்படும் போலி புகைப்படம்.!
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவால் நேற்று (செப்.17) காலமானார். அவரது உடல் இன்று (செப்.18) நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் சிஐடி சகுந்தலாவின் புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு நடிகையின் புகைப்படத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நடிகர் செந்தாமரையின் மனைவியான கௌசல்யா தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை சிஐடி சகுந்தலா என்று தவறான புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி