கூடலூர் |

ஊட்டியில் தொடங்கிய புத்தக திருவிழா; சிறப்பிக்க உள்ள விருந்தினர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று (அக்.,18) மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் புத்தக திருவிழா தொடங்கியுள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரசுதுறைகள் சார்ந்த, 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது புத்தக திருவிழா நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை, 10: 00 மணிமுதல் இரவு, 7: 00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மாலயா, கலை மாமணி ஞானசம்பந்தம், பட்டி மன்ற பேச்சாளர் ராஜா, புஷ்பவனம் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனர். நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுதுறை, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், உணவரங்கங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது

வீடியோஸ்


தமிழ் நாடு
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.