நமீபியாவை தொடர்ந்து உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டமிட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நிலவி வரும் வறட்சியால் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், 200 யானைகளை வேட்டையாட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவற்றை கொன்று ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்குமுன் 1988ம் ஆண்டு யானைகள் இதேபோல் வேட்டையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.