உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும் என திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் ‘மு.க.ஸ்டாலின் விருது' பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார். திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா..? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக்கொண்டதைப்போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என்று கூறியுள்ளார்.