தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் செப்.24ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை மேகமூட்டம் இருந்தாலும் வெயில் 100 டிகிரி வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.