பாதுகாப்பு கவசங்கள் இன்றி துப்புரவு பணி

76பார்த்தது
பாதுகாப்பு கவசங்கள் இன்றி துப்புரவு பணி.

அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வேதனை.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் பாதாள சாக்கடை சுகாதாரமின்றி கைகளில் சாக்கடை வடிகால்களை சுத்தம் செய்யும் சம்பவங்களுக்கு உதகை நகராட்சியில் நடப்பது தொடர்கதையாகி உள்ளது.

மழை மாவட்டமான நீலகரியை தூய்மை மாவட்டம் என்று அழைக்கப்படும்
உதகை மையப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பிற்காக துப்புரவு பணியாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கையால் தோண்டி எடுத்து வேலை செய்து வருவது வேதனையாக உள்ளது எனவும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்கப்படாததால் உயிருக்கே ஆபத்தான நிலையில் சுகாதாரமற்ற சூழலில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றன

எனவே உதகை நகராட்சி அதிகாரிகள்துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்து துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி