2026 சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிக, அதிமுக கூட்டணி தொடரும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று (செப்., 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியை பொறுத்தவரை இன்னும் தேர்தலை சந்திப்பதற்கு 2 ஆண்டுகள் உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசிக மதுஒழிப்பு மாநாட்டிற்கு வாழ்த்துகள். தேமுதிகவிற்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றார்.