மனித உடலின் மொத்த எடையில் மூளை இரண்டு சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால், உடலின் ஆற்றலில் 20 சதவிகிதம் அளவில் மூளை பயன்படுகிறது. மனிதர்களால் தினமும் இரவில் நான்கிலிருந்து ஆறு கனவுகளை காண முடியும். ஆனால், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. மூளையில் உள்ள அமிக்டாலா என்கிற சிறிய பாதாம் வடிவமைப்பு உணர்ச்சிகளை செயல் வடிவம் ஆக்குவதற்கு உதவுகிறது, குறிப்பாக பயம், மகிழ்ச்சி சார்ந்த உணர்ச்சிகளை செயல் ஆக்குகிறது.