
IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி
IPL தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ரச்சின் ரவீந்திரா 65, ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்கள் குவித்தனர்.