கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நேற்று ஆரல்வாய்மொழி பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளின் விளை நிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சூரியசக்தியால் இயங்கும் வேலி அமைக்கும் திட்டத்தினை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.